Categories
Uncategorized மாநில செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. சந்தர்ப்பவாத செயல்…. காங்கிரஸ் தலைவர் குற்றசாட்டு….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது.

ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இருப்பினும் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் முறை போராட்டங்கள் தொடரும் என்று ஒரு சில விவசாய அமைப்புகள் கூறி வருகின்றன.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது, 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக 3 வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் அந்த 5 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. எனவே வேளாண் சட்டத்தை தற்போது வாபஸ் பெற்றது என்பது ஒரு சந்தர்ப்பவாத செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |