Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் வாபஸ்…. போராட்டக் களத்தை காலி செய்ய மறுக்கும் விவசாயிகள்….!!

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடுகின்றனர்.

மேலும் பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்ப முடிவு செய்து உள்ளனர். ஆனால் ஒருசில விவசாயிகள் அங்கு முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை தவிர மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே போராட்டம் இன்னும் முடியவில்லை என்றும் ஒரு வருடமாக தங்களின் இல்லமாக மாறிய போராட்டக் களங்கள் காலி செய்யப்படாது என்று விவசாயிகள் சிலர் கூறுகின்றனர். மேலும் சட்டத்தை முறைப்படி ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஹர்தீப் சிங் என்ற போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |