செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், எழுவர் விடுதலையை பொருத்தவரைக்கும் அதில் வந்து நம்முடைய கவர்னர் அல்லது மத்திய அரசாங்கம் இதன் மேல் பழியை போட்டுவிட்டு திமுக தப்பிக்க கூடாது. திமுக வந்து என்ன சொன்னார்கள் ? நாங்கள் வந்தால் ஏழு பேரை விடுதலை செய்வோம் என்று சொன்னார்கள்.
அதனால் திமுக தான் இந்த விஷயத்தில் பதில் சொல்ல வேண்டும், திமுக வந்து அவர்களுக்கு வந்து பரோல் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு சலுகை காட்டி கொண்டு, அப்படியே எத்தனை நாட்களுக்கு தள்ளி போட முடியும், திமுக தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதனால் இது திமுக சம்பந்தப்பட்ட விஷயம்தான்.
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம், சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு, சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம். இப்படி தேசிய ஒருமைப்பாடு, விவசாயி தன் விளைவிக்கின்ற அந்த விளை பொருளை இந்தியாவிலேயே எந்த பகுதிக்குச் சென்றும்…. அவருக்கு எங்கே விலை கிடைக்குதோ அங்கே விற்றுக்கொள்வார்கள்.
நாடு முழுக்க சந்தை படுத்தகூடிய ஒரு வசதி, புரோக்கர்கள் ,இடைத்தரகர்கள், இந்த கமிசன்தாரர்கள் இவர்களுடைய அந்த ஆதிக்கத்தை ஒழித்து விவசாயியே தன்னுடைய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடிய உரிமை இவற்றையெல்லாம் கொடுத்தது நம்முடைய வேளாண் சட்டங்கள். இந்த வேளாண் சட்டங்கள்… அவன் காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஊக்கத்தொகையாக, ஈட்டுத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வருடத்திற்கு அவர்களுடைய வங்கி கணக்கிற்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுக்கு வங்கி கணக்கிலேயே நரேந்திர மோடி வரவு வைத்தார்.
அதேபோல குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நம்முடைய விவசாயம் இயற்கை விவசாயம் ஆக… நம்முடைய விவசாய நிலங்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு, பயிர் காப்பீட்டு வசதி இப்படி பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த நாடு முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நல்ல அந்த சட்டங்களை தேச விரோதிகள் பாகிஸ்தானிலிருந்து, சீனாவிலிருந்தும் தூண்டிவிட்டு குறிப்பாக காலிஸ்தான் பிரிவினைவாதிகள் விவசாயிகள் என்கின்ற போர்வையில் டெல்லி நகரத்தை முற்றுகையிட்டு, வன்முறை நிகழ்த்தி, இன்றைக்கு அதன் காரணமாக இந்தியா முழுக்க ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார்கள்.
எனவே வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற்று இருக்கிறார். இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு. அந்த திரும்பப் பெற்ற வேளாண் சட்டங்களையும் 3 சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இந்த தேச விரோதிகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து போக கூடாது அதை அமல்படுத்த வேண்டும் என்ற பிரசார இயக்கத்தை நாங்கள் துவக்குகிறோம். அதற்காக இங்கே ஒரு கோரிக்கை… கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம் என தெரிவித்தார்.