Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்ட நகல்கள்… ஆவேசத்துடன் கிழித்த முதல்வர்…!!!

எனது நாட்டின் விவசாயிகளுக்கு நான் துரோகம் இழைக்க முடியாது என்று கூறி வேளாண் சட்ட நகலை சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் கிழித்தார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், போராடி வரும் எனது நாட்டின் விவசாயிகளுக்கு நான் துரோகம் இழைக்க முடியாது என்றும் கூறி சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகலை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.

Categories

Tech |