Categories
மாநில செய்திகள்

வேளாண் துறைக்கு ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு……!!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் சிறப்பு திட்டத்திற்கு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை துறைக்கு ஒட்டுமொத்தமாக 33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு (கடந்த ஆண்டின் திருத்திய மதிப்பீடு 32,775.78 கோடி) செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்குணம் கொண்ட மஞ்சள், இஞ்சி ஆகியவற்றுக்கான இடுபொருட்களுக்காக ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |