தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக சில அறிக்கைகள் வெளிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டம் தமிழக வேளாண் பட்ஜெட்டில் 7,333 கோடி ரூபாய் பெரிய மற்றும் சிறிய அணைகளுக்கு புதிய தடுப்பணைகள் கட்டவும், ஏரி குளங்களை தூர்வாரவும் நீர்பாசனத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நெல் சாகுபடி திட்டத்திற்கு ரூ. 22 கோடியும், ஏரி, குளங்களில் உள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற ரூ. 80 கோடியும், 80 கோடி ரூபாய் மேட்டூர் அணையில் இருந்து 4,294 கி.மீட்டர் வரை உள்ள கால்வாய்களை தூர்வாரவும் ஒதுக்கப்பட்டதோடு கரும்பு டன்னிற்கு ரூ. 195 ஊக்கத்தொகையும், ஆமணக்கு, எள், நிலக்கடலை ஆகியவற்றின் பரப்புகளை அதிகப்படுத்த
கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரூ. 28 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வட்டியில்லா பயிர்கடன் வழங்க ரூ. 200 கோடியும், இலவச விவசாய மின் இணைப்பு வழங்க ரூ. 5,157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது