வேளாண் மசோதா குறித்த முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும் விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஜனசங்க தலைவர் பண்டித்தீன்தயால் உபாத்யா ஆண்டு விழா கொண்டாட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் இருந்ததாகவும் அதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருவதாகவும் தெரிவித்தார். வேளாண் மசோதா குறித்த முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும், விவசாயிகளுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூற வேண்டுமென வலியுறுத்திய பிரதமர் சமூக வலைதளங்களில் விவசாய திட்டங்களுக்கு எதிராக பகிரப்படும் தகவல் பரப்புபவர்கலுக்கு எதிராக இது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மா நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விலக்கிய பிரதமர் கிசான் கிரெடிட் கார்டுகளை அதிகளவிலான விவசாயிகளுக்கு வழங்கும் முயற்சி நடைபெறுவதால் அவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும் எனவும் உறுதியளித்தார். ஊதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர் சக்தியின் வாழ்க்கையை மாற்றும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி இது அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.