Categories
சினிமா தமிழ் சினிமா

வேஷ்டியில் கலக்கும் அனிருத், தனுஷ்…. திருசிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட்…. வீடியோ வெளியிட்ட படக்குழு….!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருசிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் சினிமாக்களில் படு பிசியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் திருசிற்றம்பலம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய ஜவகர் மித்ரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Categories

Tech |