Categories
சினிமா தமிழ் சினிமா

வேஷ்டியில் கலக்கும் மாளவிகா மோகன்…. இணையத்தில் போட்டோ செம வைரல்…!!!

பிரபல நடிகை மாளவிகா மோகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை மாளவிகா மோகன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தளபதி விஜய் உடன் சேர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததால் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். இவர் தற்போது வேஷ்டியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துடன் வேஷ்டி கட்டும் நேரம் இன்னும் முடிவடையவில்லை எனவும், ஊடகங்களில் இருந்து   விலகிய என்னுடைய சிறந்த நண்பரால், நான் அவள் பெயரை குறிப்பிடவில்லை என்றால் என் தலையை தின்றுவிடுவாள் என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது

Categories

Tech |