தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப கோவிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து வருகை தந்தார்.
தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு நேற்று முன்தினம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளது.. அவர்களும் இன்று பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள்.. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை (28ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது..
இதற்கிடையே இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரியமாக உடையான வேஷ்டி அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தார்.. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.