மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து(96). இன்று மாரடைப்பால் காலமானார். இட ஒதுக்கீடு தொடர்பான சிந்தனையை வட இந்தியா முழுவதும் பரப்பியவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியாரிய சிந்தனையாளர் ஆனைமுத்துவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.