Categories
மாநில செய்திகள்

வைகாசி விசாகம்: மதுரை TO பழனி இடையில்…. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

வைகாசிவிசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி மதுரை-பழனி இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வேயானது அறிவித்து உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பழனியில் வருகிற 12ஆம் தேதி வைகாசிவிசாகம் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகவே பயணிகள் வசதிக்காக மதுரை -பழனி ரயில் நிலையங்களுக்கு இடையில் சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் மதுரை -பழனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 10:50 மணிக்கு புறப்பட்டு மதியம் 01:25 மணிக்கு பழனி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் பழனி -மதுரை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியிலிருந்து மதியம் 02:45 மணிக்கு புறப்பட்டு மாலை 05:10 மணிக்கு மதுரை வந்து சேரும். இச்சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கிடையில் இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் வரும் 12ஆம் தேதி ஒருநாள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தன் கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |