வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் குழு தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பத்து நாட்கள் சொர்க்க வாசலை திறந்து வைக்க அவர் முடிவு செய்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய 150 பேருந்துகள் இயக்க திட்ட மிட்டுள்ளது. திருமலை தேவஸ்தான சொத்துக்கள் குறித்த வெள்ளை அறிக்கை, இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.