Categories
மாநில செய்திகள்

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முல்லை ஆறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஆற்றை கடப்பதற்கு, இறங்குவதற்கு, குளிக்க மட்டும் துவைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி வந்தவுடன் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்க வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக திறந்து விடுவது வழக்கம் .ஆனால் இந்த முறை அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டத்தை 70 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் நீர் வரத்து அதிக அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |