Categories
மாநில செய்திகள்

வைகை அணை நீர் திறப்பு அதிகரிப்பு…. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும்,சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. ஒரே வருடத்தில் வைகை அணை மூன்று முறை நிரம்பியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் சிறிய 7 மதகுகள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |