மதுரையில் நடைபெற்று வரும் கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விபரம் அல்லது வேறு ஏதேனும் விபரம் குறித்து அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நிகழ்வில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என ஒரு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.