Categories
மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை – விழுப்புரம் இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அதிகாலை 5.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வரை இயக்கப்படும்.

இதனையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.50 மணிக்கு மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், பாதி வழியில் நிறுத்தப்பட்டு எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |