மதிமுகவிலிருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வைகோ மகனுக்கு பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.. அதில், 106 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது.. 104 பேர் ஆதரவு தெரிவித்தனர்.. 2 பேர் ஆதரவு கொடுக்கவில்லை.. இதையடுத்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மதிமுகவிலிருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.. எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டதாக கூறி பதவி விலகிய ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்..