டிராக்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி புதுப்பாளையம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சிவா டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு மின் கம்பியின் மீது வைக்கோல் உரசி திடீரென தீப்பிடித்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவியது. இதில் டிராக்டர் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.