Categories
சினிமா தமிழ் சினிமா

“வைதேகி காத்திருந்தாள்” தொடரிலிருந்து விலகிய பிரஜன்…. ஏன் தெரியுமா…? அவரே சொன்ன காரணம்…!!!

விஜய் டிவியின் “வைதேகி காத்திருந்தாள்” தொடரிலிருந்து ஹீரோவாக நடித்த பிரஜன் விலகிவிட்டார். அதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் “வைதேகி காத்திருந்தாள்”. இந்த சீரியலில் ஒரு பாட்டி, பேத்தியை தொலைத்துவிட்டு அவள் வருவாள் என காத்துக்கொண்டிருக்கிறார். பேத்தி பாட்டியை வந்தடைகிறார். இவர்களை வைத்தே கதை நகர்கிறது. இத்தொடரில் ஹீரோவாக பிரஜன் நடித்தார்.

தற்போது அவர் இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் “முன்னா” என்பவர் நடிக்கிறார். தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். அதாவது தன்னிடம் ஆறு படங்கள் உள்ளன. தொடர் மற்றும் படங்கள் என இரண்டையும் தொடர முடியவில்லை. ஆகையால் தொடரிலிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |