நவி மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஐடன் மார்க்ராம், வாஷிங்டன் சுந்தரை தவிர யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை.
லக்னோ சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது. அந்த அணியில், கே.எல் ராகுல், டி காக், எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி போன்றோர் பேட்டிங்கில் சிறப்புத் திறமை உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் போன்றோர் பௌலிங் சிறப்பாக செய்வார்கள். இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.