வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது.
நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் மற்றும் ஆந்தகுடி இளையராஜா இணைந்து பாடியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.