இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம் டிசம்பர் 10, 2019 10:49ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.
ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபைஎன்ற பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இந்த சேவையின் முதற்கட்டமாக இது டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ, போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி ஜெ6, சாம்சங் கேலக்ஸி ஆன் 6, சாம்சங் கேலக்ஸி எம்30எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் போன்ற மாடல்களில் மட்டும் தான் பயன்படுத்தமுடியும்.
இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ய ;
சியோமி ஸ்மார்ட்போன்களில் செட்டிங்ஸ் — சிம் கார்டு மற்றும் மொபைல் நெட்வொர்க்ஸ் — ஏர்டெல் — மேக் கால்ஸ் ஆன் வைபை ஆப்ஷன்களை ஆக்டிவேட் செய்யவும்.
ஆப்பிள் ஐபோன்களில் செட்டிங்ஸ் — மொபைல் டேட்டா — வைபை காலிங் ஆப்ஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்.
சாம்சங் ஸ்மார்ட்போன்களில் க்விக் செட்டிங்ஸ் — வைபை காலிங் வசதியைஆக்டிவேட் செய்யலாம்.