Categories
தேசிய செய்திகள்

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு… கனரா வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புநிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
சந்தையில் பல்வேறு முதலீடுகள் இருந்தாலும், எந்தவித நஷ்டமும் இன்றி சிறந்த முதலீடாக இருப்பது வைப்பு நிதி திட்டங்கள் தான். இது மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அந்த வகையில் கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வட்டி விகிதமானது அதிகபட்சமாக 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு பொருந்தும் என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள்

7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 2.95%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.9%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4%
180 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.45%
1 வருடத்திற்கு மட்டும் – 5.20%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் – 5.2%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் – 5.4%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் – 5.5%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்கு – 5.5%

Categories

Tech |