பிக் பாஸ்ஸின் நான்காம் சீசனுக்காக ஆயத்த பணியில் விஜய் டிவி ஈடுபட்டுள்ளது
தமிழக தொலைக்காட்சிகளில் விஜய் டிவியின் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியானது பிக்பாஸ் என்று அனைவரும் அறிவர். இதுவரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நான்காம் சீசன் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கம்போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இக்கொரோனாவின் விளைவாக பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பிக்பாஸ் நான்காவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் அதற்கான அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கமலஹாசனின் புதிய தோற்றமானவெள்ளை தாடியுடனும் முறுக்கு மீசையுடனும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவிவருகிறது. பிக் பாஸின் மூன்றாவது சீஸனில் இடம்பெற்ற வனிதா அவர்களின் திருமணத்தை குறித்து பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுந்தன. அவ்வித சர்ச்சையில் பேசப்பட்ட நடிகைகள் சனம் ஷெட்டி மற்றும் சூர்யா தேவி ஆகியோர் பிக்பாஸ் நான்காம் சீசனுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.