தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் .
நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். மிலந்த் ராவ் இயக்குநராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், கிரிஷ் இசையமைப்பாளராகவும் இணைந்து நெற்றிக்கண் படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படத்தில் நயன்தாராவுடன், அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.
கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படம் 2011-ம் ஆண்டு வெளியானது, அதன் தமிழ் ரீமேக் தான் ‘நெற்றிக்கண்’ என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.