கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினரால் 5 வீரர்கள் கொல்லப்பட்டகாக சீனா முதன் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 ஜூன் 15 ஆம் தேதி எல்லை பிரச்சனை காரணமாக லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டது.
ஆனால் இதுகுறித்து சீனா தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் சீனா முதன்முறையாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய ராணுவ ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று கடந்த 2020 ஜூலையில் நடந்த தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நான்கு சீன ராணுவ வீரர்களுக்கு கௌரவப் பட்டமும் முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டதாக அறிவித்துள்ளது .
மேலும் சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி ,சீனா செய்தி போன்ற செய்திகளில் ராணுவ வீரர்களை வழி நடத்திய மற்றும் பலத்த காயமடைந்த கர்னலுக்கு கௌரவப்பட்டம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்திருந்தன. இதை அடுத்து அங்கு நடந்த மோதல் வீடியோவையும் சீனா வெளியிட்டுள்ள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
On-site video of last June’s #GalwanValley skirmish released.
It shows how did #India’s border troops gradually trespass into Chinese side. #ChinaIndiaFaceoff pic.twitter.com/3o1eHwrIB2— Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) February 19, 2021