மூன்று வயது சிறுவன் தனது தாய் மீது புகார் அளிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தாய்க்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பதிவு செய்து ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து சிறுவன் கூறும் புகாரை அதிகாரி ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் தனது தாய் மிட்டாயை திருடியதாகவும் தன்னை எப்பொழுதும் திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து புகாரில் கையெழுத்திட சிறுவனிடம் அதிகாரி கேட்டபோது அவர் காகிதத்தில் சில கோடுகளை வரைந்துள்ளார். இதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த அதிகாரி சிறுவனுக்கு ஆறுதல் கூறி யார் வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அச்சமின்றி செல்லலாம், புகார் அளிக்கலாம் என்று கூறி சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை கூறியதாவது. எனது மகன் குளித்த பின் நெற்றியில் கருப்பு மை பூசுவதற்கு மறுத்தான். அவனது தாய் அவனிடம் இருந்து சாக்லேட்டை வாங்கினார். இதனால் கோபம் அடைந்தவன் தாய்க்கு எதிராக புகார் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் அவனை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை சிறுவனுக்கு வீடியோ மூலம் என்ன வேண்டும் என்று கேட்டார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவனுக்கு சாக்லேட் மற்றும் சைக்கிள் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.