தென்காசி அருகே பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொது வெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்..
கடந்த சில தினங்களாக மதுரை, திண்டுக்கல், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிலர் தொடர்ச்சியாக பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.. இவர்கள் மீது ஏற்கனவே காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ராமநாதபுரம் என்ற ஏரியாவில் பால் வியாபாரிகள் வேலை செய்து வருகிறார் அஜித் குமார்..
இவர் பெட்ரோல் குண்டு தயார் செய்து அதை பொதுவெளியில் வெடிக்க செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.. இதற்கிடையே இது குறித்து பொதுமக்கள் மாவட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்க்கு வீடியோவை அனுப்பினர்.. அதனடிப்படையில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அஜித்குமார் மற்றும் கார்த்திக் இருவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் 285 பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவித்தல், ஐ பி சி 282 மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வெடிப்பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்துள்ளனர்.. மேலும் தலைமறைவாகியுள்ள கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்..