கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகீலா தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் பற்றி பரபரப்பாக பேசியுள்ளார்.
அதாவது “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பெரிதாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமா ? அவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள் ? என்று கேள்வி கேட்கிறீர்கள் முதலில் உங்களுடைய பிள்ளைகளை வளர்ப்பது பற்றி யோசியுங்கள் என்று தாறுமாறாக சாடியுள்ளார்.
அதேபோல் அடுத்தவர்களுடைய வாழ்க்கை பிரச்சனை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசாதீர்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் ? என்பதை உணருங்கள். மேலும் ஒரு அப்பாவாக ரஜினியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பேசுங்க” என்று இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பதிவு தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.