Categories
மாநில செய்திகள்

வைரல் புகைப்படத்தை எடுத்த கலைஞருக்கு… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!!

நிவாரண நிதி வழங்கியபோது ஏழை பாட்டியின் சிரிப்பை அற்புதமாக படம் பிடித்த புகைப்படக் கலைஞரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்தியுள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு தமிழக மக்களுக்கு நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை அடுத்து இரண்டாவது தவணை 2000 ரூபாயும், 14 வகை மளிகை பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை பணம் வழங்கப்படும்போது அன்றைய தினம் புகைப்படக் கலைஞர் ஒருவர் ஏழை பாட்டியின் சிரிப்பை தத்ரூபமாக புகைப்படம் எடுத்தார். இது மிகவும் வைரலானது.

அந்த பாட்டி ஒரு கையில் 2 ஆயிரமும், மற்றொரு கையில் மளிகைப் பொருட்களையும் வைத்தவாறு சிரித்தவாறு இருந்தார். அந்த சிரிப்பு அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து அந்த பாட்டியின் புகைப்படத்தை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹார்டி என்பவரை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் வரவழைத்து அந்தப் புகைப்படத்தையே பரிசாகக் கொடுத்து பாராட்டும் தெரிவித்தார்.

Categories

Tech |