கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலிட்டி ஷோவில் சின்ன குழந்தைகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளனர்.
https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ftamilnadu-television-reality-show-criticised-pm-modi%2Farticleshow%2F88937402.cms
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. மேலும் பாஜகவினர் பலரும் அந்த தொலைக்காட்சி சேனல் நிர்வாகத்தின் மீதும், அதில் நடித்த குழந்தைகளின் பெற்றோர்கள் மீதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்
— K.Annamalai (@annamalai_k) January 16, 2022
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை நகைச்சுவையாக விமர்சித்த டிவி ரியாலிட்டி ஷோ தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதியளித்ததாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
நடவடிக்கை யார் மீது? எடுத்தவர் மீதா?, நடித்தவர் மீதா? அல்லது அதை பார்த்து சிரித்தவர் மீதா? @BJP4India = Nazi
— Karti P Chidambaram (@KartiPC) January 16, 2022