ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் எடுத்தார். மேலும் மொயின் அலி 27 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 44 ரன்கள் விளாசினார்..
இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களா களம் இறங்கிய டேவிட் வார்னர் 4, ஆரோன் பிஞ்ச் 13 என அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் மிட்செல் மார்ஸ் 29 பந்துகளில் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.. மிடில் வரிசையில் கிளென் மேக்ஸ்வெல் 8, ஸ்டாய்னிஸ் 22 என ஆட்டமிழந்த போதிலும், டிம் டேவிட் அதிரடியாக விளையாடினார்.. இதனால் வெற்றிவாய்ப்பு ஆஸ்திரேலியா பக்கமே ஓங்கி இருந்தது.. டிம் டேவிட் 23 பந்துகளில் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) 40 ரன்கள் குவித்த நிலையில், சாம் கரண் வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு வெற்றி இங்கிலாந்து பக்கம் சாய்ந்தது.
கடைசியில் 2 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.ரீஸ் டோப்லி 19 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும் கொடுக்காமல் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேத்யூ வேட் பேட் கம்மின்ஸ் இருவராலும் பவுண்டரி அடிக்க முடியவில்லை.. கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட சாம்கரன் முதல் பந்தில் கம்மின்ஸ் சிக்ஸர் அடித்தாலும், அடுத்தடுத்த பந்துகளில் கட்டுப்படுத்தி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்தது. மேத்யூ வேட் 10 மற்றும் பேட் கம்மின்ஸ் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணியில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் இருக்கிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது மிட்செல் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பீல்டிங் செய்தார். சாம் கரன் வீசிய இன்னிங்ஸின் 12வது ஓவரின் முதல் பந்தில் இந்த சம்பவம் நடந்தது. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் ஆட்க்கொண்டிருந்தனர். மார்ஷ் 34 ரன்களில் இருந்தார், அவர் அந்த பந்தை லாங் ஆஃப் திசையில் அடித்தார்..
அப்போது சற்று ஓடி வந்த பென் ஸ்டோக்ஸ் எல்லைக்கோடு அருகே பந்தை துள்ளி பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் மைதானத்திற்குள் வீசினார். 2 ரன்கள் மட்டுமே மார்ஷ்ஷால் எடுக்க முடிந்தது, மேலும் ஸ்டோக்ஸ் தனது அணிக்கு மதிப்புமிக்க 4 ரன்களைசேவ் செய்தார். பென் ஸ்டோக்ஸ் பாய்ந்து தடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
Ben Stokes with an absolutely magical boundary save 😱
We can't get enough of this! 🔥
Silly stuff.#AUSvENG pic.twitter.com/ipM9sYLVBl
— Cricket on TNT Sports (@cricketontnt) October 12, 2022