தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவுகின்றது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது இந்த வைரஸ் காய்ச்சல் மழைக்காலத்தில் பரவக்கூடிய தான் என்றும், இதனை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் வரும் 25 ஆம் தேதி வரை 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது பள்ளி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் தாக்கம் குறைந்த பிறகும் மீண்டும் பள்ளிகளை திறக்கலாம். 1ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து மற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.