Categories
தேசிய செய்திகள்

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு போக விதிக்கப்பட்ட தடை நீக்கம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

ஜம்முவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் திரிகுடாமலை உச்சியில் இருக்கும் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக அந்த கோவிலுக்கு போகும் யாத்திரை நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்று காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் அந்த கோயிலுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |