Categories
தேசிய செய்திகள்

வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றையும் இந்தக் கொரோனா தொற்று ஆட்டி படைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியது. கடந்த ஒரு வருடமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வெவ்வேறு இடங்களில் இருந்த ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கூகுள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல ஃபேஸ்புக், ட்விட்டர், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களும் சம்பளத்தை குறைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Categories

Tech |