வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில் 1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது.
வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் 53,000 கோடி ரூபாய் அரசுக்கு வழங்க வேண்டி இருந்தது. இதனை அடுத்து, வோடபோன் நிறுவனம் கடந்த 17 ந்தேதி மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.2,500 கோடி வழங்கியது. இந்த வார இறுதியில் ரூ.1,000 கோடி வழங்கவும் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று 1,000 கோடி ரூபாயை அரசுக்கு வோடபோன்-ஐடியா நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.