வ. உ. சி பூங்காவில் ஊஞ்சல், சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் விளையாடினார்கள்.
ஈரோட்டில் வ. உ. சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதில் புதிய விளையாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அழைத்து வருவார்கள். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் வ.உ.சி சிறுவர் பூங்காவிற்கு பொதுமக்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.
அவர்கள் தங்களது குழந்தைகளை விளையாட வைத்து சந்தோஷமடைந்தார்கள். மேலும் ஊஞ்சல், சீசா ஆகிய விளையாட்டு உபகரணங்களில் சிறுவர் சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மேலும் வயதானவர்கள் வாக்கிங் சென்று மரத்தடியில் உட்கார்ந்து குடும்பத்தினருடன் நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசி பொழுதை கழித்துள்ளனர்.