நாளை வத்திராயிருப்பு பகுதி அருகே நடைபெற உள்ள ஜல்லிக்கட்டிற்கு 150 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக வ.புதுப்பட்டி வாடிவாசலை அப்பகுதி மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 150 மாடுபிடி வீரர்கள் மற்றும் 150 காளைகள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே அப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறவிருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு டிவி, கட்டில், பீரோ, தங்க நாணயம், ஃப்ரிட்ஜ் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஜல்லிக்கட்டிற்க்கான முன் ஏற்பாட்டினை விழா கமிட்டி குழுவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.