Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம்சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர்தான்… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் . ஆனால் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த தகவலை படக்குழு வெளியிடவில்லை.

Kiara Advani locked for NTR30

மேலும் ஆலியா பட், மாளவிகா மோகனன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . வருகிற ஜூலை 31-ஆம் தேதி கியாரா அத்வானியின் பிறந்த நாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |