ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக 2.O படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
It’s a wrap !!
Completed first schedule of #RC15 in Pune, Satara and Phalton.
Megapower Star @alwaysramcharan and Maverick Director @shankarshanmugh are all set to deliver something very special !!@advani_kiara @DOP_Tirru @MusicThaman @SVC_official#SVC50 pic.twitter.com/PF3FxowYze
— Sri Venkateswara Creations (@SVC_official) November 3, 2021
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஷங்கர், ராம் சரண், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.