இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . இது ராம் சரணின் 15வது படமாகும் . தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்திற்கு பிறகு அந்நியன் பட ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.