Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த படம் பான்- இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

Romantic song on Ram Charan and Alia Bhatt in RFC - tollywood

அதன்படி பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் ராம்சரண், ஆலியா பட் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |