Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் ஹீரோயின் இவர் தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர்- ராம் சரண் இணையும் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது . இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .

Malavika Mohanan Fan Photos | Malavika Mohanan Pictures, Images - 72086 -  FilmiBeat

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது இவர் தனுஷின் ‘D43’ படத்திலும், ‘யுத்ரா’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

Categories

Tech |