முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து கிளம்பி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்று அங்குள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா, ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர். இந்த சூழலில் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்திருந்த தீபக் சாஹரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார். பும்ராவுக்கு பதில் தீபக் சாஹர் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவர் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், சஹார் விலகியுள்ளதால் ஷமியே டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பார் என கூறப்படுகிறது.. ஆனால் பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.. அதேசமயம் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இன்று ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியதாவது, ஒரு ஃபார்மில் உள்ள சிராஜ் உலகக் கோப்பை அணியில் இடம் பெறத் தகுதியானவர். “சிராஜ் நன்றாகப் பந்துவீசுகிறார், ஷமி சிறிது காலம் விளையாடவில்லை என்பதால் நான் அவருக்காகப் போகிறேன். உலகக் கோப்பையில் இந்தியா நேரடியாகத்லீக் போட்டி விளையாடுவதற்கு முன் இரண்டு வார்ம்-அப் போட்டிகள் உள்ளன. தற்போது வரை 15வது வீரராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ஷமி ஆஸ்திரேலியாவுக்கு டீமுடன் போயிருக்காரா? அவர் போகவில்லை. சமீபத்தில் ஷமி எந்த டி20 கிரிக்கெட்டும் விளையாடவில்லை. இது ஒரு கவலையாக உள்ளது”
மேலும் அவரது தரத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் (ஷமி) எந்த கிரிக்கெட்டையும் விளையாடவில்லை என்பது உண்மைதான். கொரோனாவிற்கு பிறகு திரும்புவது (பார்ம்) எளிதானது அல்ல. டி20 கிரிக்கெட்டில் இது ஒரு 4 ஓவர் ஆட்டம் என்று எனக்குத் தெரியும். ஆனால். சிராஜ் பந்துவீசுவதைப் பாருங்கள், அவர் அற்புதமாக பந்துவீசுகிறார்,” என்று கூறினார்.
அதாவது பவர்பிளேயின் போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுப்பதில் சிராஜின் திறமை, அவரை ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒரு சொத்தாக ஆக்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சிராஜ் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஞ்சியில் தொடரை சமன் செய்ய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 3வது ஒருநாள் போட்டியில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.