மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால் சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதல் செய்து வந்தார். இதையடுத்து 2 பேரும் வசாயில் சில வருடங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். அதன்பின் அவர்கள் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்ற மேமாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி இருக்கிறார். அப்போது 2 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் அப்தாப், ஷரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின் அவர் ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அதனை புதியதாக வாங்கிய குளிர்சாதன பெட்டியில் 3 வாரங்களுக்கு வைத்துள்ளார். அந்த உடல் பாகங்களை அப்தாப் கொஞ்சம், கொஞ்சமாக குப்பைதொட்டி மற்றும் வனப்பகுதிகளில் வீசினார். சம்பவம் நடைபெற்று 6 மாதங்கள் ஆகி விட்டதால் ஷரத்தாவில் உடல் உறுப்புகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ஷரத்தா கொலைவழக்கில் கைரேகை நிபுணர்களின் வேலை சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில கைரேகை ஆய்வகத்தின் முன்னாள் இயக்குனரான பாலா சாகிப் தவுன்ட்கர் கூறியிருப்பதாவது “ஷரத்தாவின் எலும்புகள் துண்டுகளாக மீட்கப்பட்டிருப்பதால், அதிலிருந்து டிஎன்ஏ-வை கண்டறிவது சவாலானதாக இருக்கும். அத்துடன் டிஎன்ஏ கண்டறியப்பட்டாலும் அது ஷரத்தாவின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் டி.என்.ஏ.வுடன் ஒத்துபோக வேண்டும். எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ ஒத்துபோகவில்லை எனில் வழக்கு விசாரணையில் குற்றத்தை நிரூபிக்க காவல்துறையினருக்கு கடினமாக இருக்கும். இதன் வாயிலாக ஷரத்தா கொலைவழக்கு கிரைம் நாவலை போன்று மர்மங்கள் நிறைந்து பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.