மேலும் 14 நாட்கள் அப்தாப் அமீனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள வசாய் பகுதியில் ஷரத்தா என்ற இளம் பெண் தனது காதலனான அப்தாப் அமீன் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் ஷரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்தாப் அமீனை கடந்த மாதம் 10-ஆம் தேதி கைது செய்தனர்.
இவரிடம் உண்மையை கண்டறியும் சோதனையும், பாலிகிராப் சோதனையும் நடத்தப்பட்டது. அதில் அவர் ஷரத்தாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி இவரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளார்.