தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 1,000 ஆண்களுக்கு 878 பெண்கள் என விகிதத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வரும் தலைமுறையும் முரட்டு சிங்கிளாக தான் இருக்க வேண்டுமா? என்று கவலை கொள்ளுமளவிற்கு பாலின விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்தால் இதை தவிர்க்கலாம் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Categories