இன்றைய காலகட்டத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். அவ்வாறு ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களில் ஒரு சில சமயங்களில் செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருளும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் பசுமாத்தூரில் வசிப்பவர் மோகன். இவர் தன்னுடைய சகோதரர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை பிலிப் கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிற்கு பார்சல் வந்துள்ளது.
அதில் வழக்கமாக வரும் பாக்ஸ் இல்லாமல் சாதாரண பிலிப்காட் கவரில் பார்சல் டெலிவரி செயல்பட்டதால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த அந்த கவரை வீடியோ பதிவு செய்து கொண்டே பிரித்துள்ளார். அப்போது அந்த பாக்ஸ்சுக்கு உள்ளே செல்போனுக்கு பதிலாக உடைந்துபோன டைல்ஸ் கல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக ஃப்லிப்கார்ட்டுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அவர்களும் மூன்று முறை பொருளை திரும்ப பெற்று கொள்வதாக கூறிக்கொண்டு காலக்கெடு முடிந்து விட்டதாக கூறி ஏமாற்றி விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.