Categories
மாநில செய்திகள்

ஷாக்: ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற 2 பெட்டிகள்…. பயத்தில் அலறிய பயணிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சென்னை சென்ட்ரலிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி வாக்கில் சேரன் எக்ஸ்பிரஸ் கோவைக்கு புறப்பட்டது. அதில் என்ஜினுடன் சேர்த்து மொத்தமாக 23 பெட்டிகள் இருந்தது. இரவு 11 மணி வாக்கில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடை வழியே சென்றது. இந்நிலையில் ரயிலின் S7, S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென்று பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்திருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதேபோன்று ரயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

அவ்வாறு பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதனிடையில் தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் திருவள்ளூர் ரயில்நிலையத்தின் 4-வது நடைமேடையில் மெதுவாக வந்து நின்றது. அதன்பின் ரயிலிலிருந்த பயணிகள் பதறி கீழே இறங்கினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில்  சிக்கி கீழே விழுந்ததில் பயணிகள் சில பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பெரம்பூர் லோகோ பணிமனையிலிருந்து சுமார் 30-க்கும் அதிகமான ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்தனர். பின் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு ரயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு 1 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரிலிருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரயில்வேவும் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

Categories

Tech |